search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளியில்"

    • அரசு பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது
    • கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், காணொளி காட்சி வாயிலாக"போதைப் பழ–க்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கு–ம் நிக–ழ்ச்சி–" நடைபெற்றது.

    இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணி–ப்பாளர் ரவிசேகர் ஆகி–யோர் முன்னி–லையில் வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார துணை இயக்கு–னர் மரு.கீதாராணி, ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன், உடையா–ர்பாளையம் வருவாய் கோட்டாச்சியர் பரிமளம், வட்டாச்சியர் ஶ்ரீதர், உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி, ஜெய–ங்கொ–ண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வி, ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர்சுமதி சிவக்குமார் மற்றும் நகர்ம–ன்ற உறுப்பினர்கள்,

    வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலை–மையிலான மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன்உ ள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஜெயங்கொண்டம் மகளிர் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிஅன்னை தெரசா நர்சிங் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த மாணவ மாணவிகள் பேராசி–ரியர்கள் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகி–யோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

    • அரசு பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ராகமஞ்சரி வரவேற்றார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கர், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றியும் நுகர்வோர்கள் எவ்வாறு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பது பற்றியும் விளக்க உரையாற்றினார். இதில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவரும், பெரம்பலூர் மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எஸ்.கே.கதிரவன் சிறப்புரையாற்றி பேசும்போது, நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும்போது அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தர முத்திரைகளை கவனித்தும், உணவு பொருட்கள் வாங்கும்போது அதன் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை கவனமாக பார்த்து வாங்க வேண்டும். வாங்கும் பொருட்களுக்கு தவறாமல் பில் கேட்டு வாங்க வேண்டும் என்று தெரிவித்தார். பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடங்கப்பட்டதன் நோக்கங்கள் குறித்தும், அதில் மாணவர்களின் பங்கேற்பு பற்றியும் விளக்கப்பட்டது. மேலும் நுகர்வோர் பாதுகாப்பு பற்றி சொற்பொழிவாற்றிய 11-ம் வகுப்பு மாணவி அனுதேவிக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    • மாணவர்கள் வருங்காலத்தில் அவர்களுக்கு தேவையான தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை தற்போது இருந்தே கற்று கொள்வார்கள்.
    • தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தலை மையில் மாதந் தோறும் ஒரு கூட்டம் நடத் தப்படும்.

    கோவை:

    கோவை கோட்டைமேடு பகுதியில் நல்லாயன் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 130 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் மாணவர் தேர்தல் வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்தல் கடந்த 1-ந் தேதி வேட்பு மனு தாக்கலுடன் தொடங்கியது.

    அன்று மாலை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த 4-ந் தேதி தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த தேர்தலில் மாணவர் தலைவர், துணைத் தலைவர், உணவுத்துறை தலைவர், விளையாட்டுத்துறை தலைவர், சுற்றுச்சூழல் துறை தலைவர் ஆகிய பதவிகளுக்காக மாணவர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் 4 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இன்று காலை பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    மாணவர்கள் அனைவருமே மிகுந் த ஆர்வத் துடன் வந்து வரிசை யில் நின்று தங்களது வாக்கை செலுத்தினர். வாக்களித்த மாணவர்களுக்கு விரலில் மை வைக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் 138 மாணவர்கள், 6 ஆசிரியர்கள், பள்ளி தாளாளர் ஒருவர், கல்வி அதிகாரி ஒருவர், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர் ஒருவர் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர் 118 பேர் என மொத் தம் 285 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு இன்று மாலை வரை நடக் கிறது. இந்த தேர்தல் குறித்து ஆசிரியர்கள் கூறிய தாவது:-

    மாணவர்களுக்கு ஜன நாயக மாண் பை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

    தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தலை மையில் மாதந் தோறும் ஒரு கூட்டம் நடத் தப்படும். தேர்த லில் தேர்ந்த ெடு க்கப்பட்டவர்கள் கடமையை சரியாக செய்யா விட்டால் அவர்கள் மீது மாணவர்கள் அளிக்கும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்கள் வருங்காலத்தில் அவர்களுக்கு தேவையான தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை தற்போது இருந்தே கற்று கொள்வார்கள்.

    இது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாக்கு எண்ணிக்கை வரும் 8-ந் தேதி நடக்கிறது.இதில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 11-ந் தேதி பதிவி பிரமாணம் எடுத்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×